ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இல்லத்தின் இன்று மாலை நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்திலே அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவே குறித்த பதவியில் இருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகும் அதேவேளை, பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலைமையிலேயே நாமல் ராஜபக்ஷ கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.