சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணையத்தளங்கள் தொடர்பான நிகழ்நிலைக் காப்புச் சட்டம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி அந்த சசட்டம் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இனங்களுக்கு இடையே வன்முறைகளை தோற்றுவித்தல், போலி தகவல்களை பரப்புதல், மற்றையவர் மீது சேறுபூசுதல், சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகத்தை துண்டுதல், நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்கள் ஆகிய செயற்பாடுகள் தொடர்பில் அது தொடர்பில் அமைக்கப்படும் ஆணைக்குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.