January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்திற்கு எதிராக பேரணிக்கு ஏற்பாடு: நீதிமன்றம் தடையுத்தரவு!

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது சில பிரதேசங்களின் ஊடாக பயணிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் பொது மையவாடி தொடக்கம் பிரதீபா மாவத்தை, சத்தர்ம மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை, ஜும்மா சந்தி ஊடாக சங்கராஜ மாவத்தை வரையான பகுதிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு இலக்கம் 04 நீதவான் எல்.மஞ்சுளவினால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோருக்கு இந்த தடையுத்தரவு அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.