May 23, 2025 6:02:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் மீதான ஐசிசியின் தடை நீக்கம்!  

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக தெரிவித்து, கடந்த வருடம் நவம்பர் 11 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் நிறுவன உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டிருந்தது.