
File Photo
தெற்கு அதிவேக வீதியில் பெலியத்த வெளியேறும் நுழைவாயிலுக்கு அருகில் இன்று முற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டிபன்டர் வாகனமொன்றில் வந்த குழுவொன்று குறித்த பகுதியில் ஹோட்டலொன்றுக்குள் சென்ற போது, அங்கு மற்றுமொரு வாகனத்தில் வந்த இனந்தெரியாத குழுவொன்று அங்கு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும், இவ்வேளையில் டிபன்டர் வாகனத்தில் வந்தவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.