April 12, 2025 23:27:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவராக சிறீதரன் தெரிவு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவாகியுள்ளார்.

கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலையில் இன்று நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர்.

கட்சியின் பொதுச் சபையை சேர்ந்த 330 பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். இதன்படி சிறீதரன் 184 வாக்குகளையும், சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்காக தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதல் தடவையாக நடைபெறும் வாக்கெடுப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.