இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளில் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாகவும் இதனால் கொழும்பு மாவட்டத்தில் பத்தரமுல்லை மற்றும் கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 105 புள்ளிகளாகவும், யாழ்ப்பணத்தில் 100 புள்ளிகளாகவும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் மற்றும் அது தொடர்பான மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.