இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மற்றும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 42,248 சந்தேக நபர்களை தேடி நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட வேண்டிய சந்தேக நபர்களின் பெயர் பட்டியல் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர்களில், 35,505 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் , இதுவரை கைது செய்யப்படாத 4,258 சந்தேக நபர்களும், பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படும் 2,485 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு மாத காலத்திற்குள் இவர்களை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரால் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.