May 5, 2025 9:07:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொது வேட்பாளராக தயாராகும் தயாசிறி!

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்க தான் தயாராக இருப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய நிலைமையில் எந்தக் கட்சியிலும் தகுதியான வேட்பாளர் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடதுசாரி கட்சிகளுக்கு வேட்பாளர் ஒருவர் இல்லை என்பதுடன் அவர்கள் கைவிடப்பட்ட நிலைமையில் உள்ளனர் என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதனால், மற்றைய கட்சிகளின் விருப்பம் மற்றும் இணக்கத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட தான் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.