
2022ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கு ஆயத்தமாகி வருவதாகவும், இதன்படி இம்மாத இறுதிக்குள் பெறுபேறுகள் வெளியாகும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்
தற்போது பெறுபேறுகளை கணனிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இந்த நடவடிக்கைகள் முடிவடைந்ததும் அவை இணையத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.