ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆராய்ந்து வருகின்றது.
இது தொடர்பில் கட்சித் தலைமையகத்தில் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கூடி கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யோசனைகளை செவிமெடுக்காது ஜனாதிபதியினால் தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக அந்தக் கட்சியின் செயலாளர் உள்ளிட்டோர் கடந்த தினங்களாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலைமையில் ஜனாதிபதி தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால் அவருக்கான ஆதரவு தொடர்பில் தீர்மானம் எடுக்க நேரிடும் என்றும் சில எம்.பிக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் கட்சித் தலைமையகத்தில் கூடியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் வரைரயில் பொறுமையாக இருப்பதற்கு தீர்மானித்துள்ளன.
மக்களுக்கு நிவாரணங்களை கொடுக்கும் வகையில் அந்த வரவு செலவுத் திட்டம் அமைய வேண்டும் என்றும் இல்லையேல் அதன்பின்னர் ஜனாதிபதிக்கான ஆதரவு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.