May 19, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் புதிய வீட்டுத் திட்டங்கள்!

குறைந்த வருமானமுடைய மற்றும் மத்தியத்தர மக்களுக்காக கொழும்பு நகரத்தில் புதிதாக 5 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதற்கான இணக்கப்பாட்டினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீன அரசாங்கத்துடன் ஏற்படுத்தி கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் வீடமைப்பு அதிகார சபையில் தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தத் திட்டத்திற்கு மொத்தமாக 350 மில்லியன் டொலர் செலவாகும்.

ஜனாதிபதியின் அண்மைய சீனாவிற்கான விஜயத்தின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.