May 15, 2025 0:36:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி ரணில் சீனா பயணமாகிறார்!

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு பயணமாகவுள்ளார்.

சனிக்கிழமை அவர் சீனா பயணமாவார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து சீன அரசாங்கத்துடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீன ஜனாதிபதியையும் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.