May 15, 2025 0:22:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காஸா மோதல்: இலங்கையர் இருவரை காணவில்லை!

காஸா பகுதியில் இஸ்ரேல் படை மற்றும் ஹமாஸ் இயக்கத்தினருக்கு இடையிலான மோதலில் சிக்கி இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் 8000க்கும் அதிகமான இலங்கையர்கள் வசிக்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபா நகரங்களை மையமாக கொண்டு வசித்து வருவதாக இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அங்கு இடம்பெறும் மோதல்களில் தென் பிராந்தியத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் வயிற்றிலும் கையிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலில் வசித்த இரண்டு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் அறிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.