
கொழும்பு, கொள்ளுப்பிட்டி – லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது மரமொன்று விழுந்ததில் ஐந்து பேர் உயிரழந்துள்ளனர்.
இன்று காலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பஸ் மீதே இவ்வாறு மரம் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.