May 9, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘லியோ’ டிரெய்லர் வெளியானது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.

அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் திகதி வெளியாகவுள்ளது.