January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமது அந்தரங்க வீடியோக்களை விற்ற தம்பதி கைது!

பணம் அறவிட்டு இணையத்தளம் ஊடாக தமது அந்தரங்க வீடியோக்களை விற்ற இளம் தம்பதியொன்று ஹொரணை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

25 வயது இளைஞன் ஒருவரும் 23 வயது பெண்ணொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இளைஞர்களை இலக்கு வைத்து தமது படுக்கை அந்தரங்க காட்சிகளை இணையத்தளத்தின் ஊடாக விற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.