May 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பரபரப்புக்கு பஞ்சமில்லாத ‘சந்திரமுகி 2’ – டிரெய்லர்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது.

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டில் சந்திரமுகி திரைப்படம் வெளியாகி பெரும் வசூல் வேட்டையை அள்ளியது.

இந்த படத்தில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, மாளவிகா, நாசர், வினீத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் லைகா புரடக்ஷன் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டாவது டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர்.

செப்டம்பர் 28ம் திகதி ‘சந்திரமுகி 2’ திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.