May 4, 2025 12:47:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தினசரி எரிபொருள் விலை மறுசீரமைப்புக்கு திட்டம்!

அடுத்த வருடம் முதல் தினசரி எரிபொருள் விலைகளில் மாற்றங்களை மேற்கொள்ளும் முறைமையொன்றை தயாரிக்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் நடத்தப்பட்ட சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது தினசரி தானியங்கி முறையில் எரிபொருள் விலைகளை மறுசீரமைக்கும் முறைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கைகளை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.