சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
செப்டம்பர் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ நிறையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 3,127 ரூபாவாகும்.
அதேபோன்று 5 கிலோ நிறையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,256 ரூபாவாகும்.
அத்துடன் 2.3 நிறையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 26 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அதன் புதிய விலை 587 ரூபாவாகும்.