
2022 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என்று பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மற்றும் இசற் புள்ளி தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது பெறுபேற்றை இறுதிப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற இந்தப் பரீட்சையில் 278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும், 53,513 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.