January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

ஜூலை 31ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்  எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அதன் புதிய விலை 348 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுள்ளது. அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

இதேவேளை,  ஒரு லீட்டர் டீசலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 306 ரூபாவாகும்.

அத்துடன் சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

இதேவேளை,  மண்ணெண்ணெய் விலையை லீட்டர் ஒன்றுக்கு 10 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.