November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெங்கு தீவிரம்: சுகாதார துறையினர் எச்சரிக்கை!

இலங்கையில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 56,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு அடையாளர் காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி, கேகாலை, குருநாகல், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு கூறுகிறது.

இதனால் டெங்கு தொற்றில் இருந்து பாதுகாத்துகொள்ள சுற்றுச்சூழலை நுளம்புகள் பெருகாத வகையில் சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.