January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மீண்டும் கொவிட் அச்சுறுத்தல்!

File Photo

இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொவிட் பரவல் அச்சுறுத்தல் நிலவுவதாகவும், இது கொரோனா வைரஸின் புதிய மாறுபாடாக இருக்கலாம் எனவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

நோயின் தன்மைக்கு ஏற்ப பல்வேறு மாறுபாடுகள் ஏற்படலாம் என சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

இதனால் கடந்த கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட அதே சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும், முறையாக முகக் கவசனம் அணிவது மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.