May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னணி இயக்குனரும் நடிகருமான மனோபாலா காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா காலமானார்.

தனது 69ஆவது வயதில் உடல்நலக்குறைவால் இன்று மனோபாலா காலமானதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன் பின்னர் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் காலமானார்.

ஆகாய கங்கை படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக மனோபாலா அறிமுகமானார். ரஜினி நடித்த ஊர்க்காவலன் படத்தை இயக்கிய மனோபாலா பிள்ளை நிலா, சிறைபறவை, மூடு மந்திரம், கருப்பு வெள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார்.
இதேவேளை சில வருடங்களுக்கு முன்னர் வெளியான அரண்மனை, டான், துப்பாக்கி, சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிதாமகன் படத்தில் நடித்திருந்த கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.

இயக்குனர் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக மனோபாலா பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனோபாலாவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.