May 6, 2025 23:03:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எடை அடிப்படையில் முட்டைக்கு விலை நிர்ணயம்!

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை நிர்ணயித்துள்ளது.

இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அந்த அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, வௌ்ளை முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் அமைந்துள்ளது.

இதனிடையே, ஒரு கிலோகிராம் வௌ்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.