சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இதனையொட்டி நாட்டில் பல பாகங்களிலும் இன்று முற்பகல் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்த வகையில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, முற்பகல் 9.25 மணி முதல் 9.27 மணி வரையில் மக்கள் இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி காலை வேளையில் சுனாமி இலங்கையை தாக்கியது. இதில் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய துக்கத் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.