May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார்!

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதன்படி தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ளதுடன், இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சு பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இதன் பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு இடத்திற்கு சென்று உதயநிதி ஸ்டாலின் மறியாதை செலுத்தினார்.