மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு “ஸஹிரா நடைபவனி” டிசம்பர் 12 ஆம் திகதி நடைபெற்றது.
பழைய மாணவர்களின் உயரிய ஒத்துழைப்புடன் நடந்தேறிய இந்த நடைபவனி பலகாத்திரமான படைப்புக்களுடன் மாவனல்லை நகரை வலம் வந்து கல்லூரியின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியது.
நாலாபக்கங்களிலும் வந்து கல்விகற்ற கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர கொண்டாடிய இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இலங்கையின் அதிநீளமான பாடசாலைக்கொடியாக கருதப்படும் 244 மீற்றர் நீளமான கொடியும் கொண்டு செல்லப்பட்டது.
கல்லூரியின் 83 ஆவது வகுப்பினால் (2016 க.பொ.த உயர்தரம்) தயாரிக்கப்பட்ட இந்த கொடியை 150 ஸஹிரா மாணவர்கள் சுமந்து சென்றனர்.