
பாடசாலைகளில் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் 7 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் 13 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் செப்டம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இரண்டாம் தவணை விடுமுறையை டிசம்பர் 3 ஆம் திகதி முதல் ஜனவரி 1 ஆம் திகதி வரையில் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.