May 9, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆகஸ்ட்டில் பண வீக்கம் மேலும் உயர்வு!

இலங்கையில் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் ஆகஸ்ட் மாதத்தில் பண வீக்கம் 64.3 வீதமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் இதுவரையில் பதிவான அதிகபட்ச பணவீக்க விகிதமாக இது அமைந்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஜுலை மாதத்தில் பண வீக்கமானது 60.8 வீதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.