January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் உயரும் மீன் விலைகள்!

மண்ணெண்ணெய் மற்றும் டீசல் நெருக்கடி நிலைமையால் மீன் சந்தைகளில் மீன்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த வாரங்களில் சற்று குறைவடைந்திருந்த மீன் விலைகள், 24 ஆம் திகதி முதல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி கொழும்பு – பேலியாகொட மீன்சந்தை உள்ளிட்ட மீன் மொத்த விற்பனை நிலையங்களில் கிலோ ஒன்று 100 ரூபா முதல் 200 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டமை, போதுமான மண்ணெண்ணெய் விநியோகம் இல்லாமை, டீசல் நெருக்கடி ஆகிய காரணங்களினால் மீனவர்கள் கடலுக்கு செல்வது குறைவடைந்துள்ளமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தற்போது அதிகளவில் மீன் கிடைக்கும் பருவ காலமாக இருந்தாலும், தங்களின்  படகுகளுக்கு போதுமான அளவு எரிபொருள் கிடைப்பதில்லை என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.