January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குடிவரவு, குடியகல்வு திணைக்களம்: பொதுமக்கள் சேவை இடைநிறுத்தம்

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்துக்கு பொதுமக்கள் வருகை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் மூலம் பெற்றுக் கொள்ளவேண்டிய அத்தியாவசிய சேவைகளை அலுவலக நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை  தொலைபேசி இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் ஊடாக உரிய பிரிவைத் தொடர்பு கொண்டு, ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கடவுச்சீட்டுப் பிரிவு – 070-7101060 , 070-7101070
  • குடியுரிமைப் பிரிவு – 070-7101030
  • வெளிநாட்டுத் தூதரகப் பிரிவு – 011-5329233, 011-5329235
  • விசா பிரிவு – 070-7101050
  • துறைமுகங்கள் பிரிவு – 077-7782505

இதேவேளை, கண்டி, வவுனியா, மாத்தறை மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களின் பிராந்திய அலுவலகங்கள், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் கடவுச்சீட்டுகளைப்  பெற்றுக் கொள்வதற்காகவும் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் உள்ள மக்கள், பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.