பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
இன்று மாலை 6.30 மணிக்கு அவர் உரையாற்றவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் அவர் இதன்போது கூறவுள்ளார்.
இதேவேளை இன்றைய தினத்திற்குள் இன்னுமொரு குழுவினர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
ஏற்கனவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த நான்கு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிலையில், இன்றைய தினம் மாலை மேலும் சிலர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.