May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”முடிவு பண்றது இயற்கையில்ல நான்”: மிரட்டும் ‘விக்ரம்’ டிரெய்லர்!

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்ததப் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் படத்திற்கு இவர் முதல்முறையாக இசையமைத்த படமும் இதுவாகும்.

மேலும், படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதேவேளை விக்ரம் படத்திற்காக கமல்ஹாசன் எழுதி பாடிய ‘பத்தல… பத்தல…’ எனும் பாடல் மே 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளதுடன், திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி திரைகளில் வெளியாகவுள்ளது.