எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் காத்திருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் நாட்களுக்குள் தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும், அதுவரையில் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக 40,000 மெட்ரிக் டொன் டீசலுடன் 19 ஆம் திகதி கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளது.
இதேவேளை 37,000 மெட்ரிக் டொன் பெட்ரோலுடன் கப்பல் ஒன்று தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளது. எனினும் அதற்கு தேவையான டொலரை செலுத்துவதில் காணப்படும் சிக்கல் நிலைமை காரணமாக அந்தப் பெட்ரோலை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் எதிர்வரும் நாட்களுக்குள் நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.