ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையும், அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையையும் கொண்டு வர எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
தற்போது அந்த பிரேரணையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெறுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
<எம்பிக்களின் கையொப்பங்களை பெற்ற பின்னர், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி பதவி விலகி, ராஜபக்ஷ குடும்பம் இல்லாது இடைகால அரசாங்கம் அமைக்கப்பட்டால், அந்த அரசாங்கத்தை பொறுப்பேற்கத் தயாராக இருக்கின்றோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.