November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இடைக்கால ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்”

ஜனாதிபதி பதவி விலகி பாராளுமன்றத்தில் இடைக்கால ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்ய முடியாதென்றால் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்து, பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கி, புதிய பிரதமர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என்றும் ரணில் கூறியுள்ளார்.

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு ஒன்றிணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியின் அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும், ஜே.வி.பியும் நிராகரித்துள்ளன.