January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிதி அமைச்சராக அலி சப்ரி நியமன

முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை, பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளை சட்ட ரீதியாகவும் நிலையாகவும் பேணுவதற்காக நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியுள்ள நிலையில், வெளிநாட்டலுவல்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் அமைச்சுப் பதவி மற்றும் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சபை முதல்வர் மற்றும் பிரதம கொறடா ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளதால், இந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவுகின்ற தேசிய சவால்களை தீர்ப்பதற்கு பங்களிக்குமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஜனாதிபதி ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் அவர்களுடன் கலந்துரையாடி நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும்.

ஒரு நாடு என்ற வகையில் எதிர்நோக்கும் பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்கும் நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இன்று பதவியேற்ற அமைச்சர்கள் விபரம்

01. கல்வி – தினேஷ் குணவர்தன (சபை முதல்வர்)

02. வெளிநாட்டலுவல்கள் – பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

03. நெடுஞ்சாலைகள் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (ஆளுங் கட்சியின் பிரதம கொறடா)

04. நிதி – அலி சப்ரி