May 13, 2025 21:03:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு 2000 டொன் அரிசியை வழங்க சீனா முடிவு!

Rice Common Image

இலங்கைக்கு 2000 டொன் அரிசியை வழங்க தீர்மானித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலங்காலமாக இரு நாடுகளும் பரஸ்பரம் ஆதரவளித்து வருவதால் சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக சீனத் தூதரகம் கூறியுள்ளது.

இதேவேளை தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.