May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அறிக்கை!

இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கை, மார்ச் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி வீதம் குறைந்தமை, கடன் வீதம் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி கொவிட் பரவல் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்து சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் வரி குறைப்பினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வரிகள் எந்தளவுக்கு பங்களிப்பு செய்கின்றன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நம்பகமான மற்றும் தெளிவான மூலோபாயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அத்துடன் பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிகள் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.