January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் மீனவர்கள் போராட்டம்!

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கொழுப்பில் மீனவர் சங்கங்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளன.

தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கம், அகில இலங்கை பொது கடற்றொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட பல மீனவர் சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இவர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இருந்து ஜனாதிபதி செயலகம் வரையில் பேரணியாக சென்றனர்.

இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து, சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான வழிவகைகளை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் வலியுறுத்தினர்.