‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 41 பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்கனவே நான்கு பேருக்கு கடந்த வாரங்களில் தொற்று உறுதியாகியிருந்தது.
இதன்படி இலங்கையில் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் சுகாதார ஒழுங்குவிதிகளை முறையாக பேணுமாறு சுகாதார துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்துமாறும் சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.