May 17, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒமிக்ரோனால் கிறிஸ்துமஸ் கால விமானப் பயணங்கள் பல இரத்து!

ஒமிக்ரோன் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் நாடுகள் பல, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதனால் பலரின் பண்டிக்கால பயணங்கள் தடைப்பட்டுள்ளன.

குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

இதனால் அந்த நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாடுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உலகம் முழுவதும் இந்தக் காலப்பகுதியில் 4500 வரையிலான விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கிறிஸ்துமஸ் தினத்தில் மாத்திரம் ஏற்பகவே திட்டமிடப்பட்டிருந்த 2100 வரையிலான விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.