April 9, 2025 17:19:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ‘சகுராய்’ நிறுவனத்தின் விமான சேவைகள் இடைநிறுத்தம்!

Photo: Facebook/ Sakurai Aviation

இலங்கையில் ‘சகுராய்’ நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்தச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று இன்றைய தினம் நீர்கொழும்பு பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டு விபத்துக்கு உள்ளானது.

இதேவேளை கடந்த வாரம் இந்த நிறுவனத்தின் இன்னுமொரு சிறிய ரக விமானமொன்று பயாகல கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி மறு அறிவித்தல் வரையில் அந்த நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.சானக்க தெரிவித்துள்ளார்.