March 31, 2025 5:46:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புத்தி கெட்ட மனிதர் எல்லாம்’ படக் குழுவினருக்கு அமைச்சர் நாமல் வாழ்த்து!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘புத்தி கெட்ட மனிதர் எல்லாம்’ திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகின்றது.

ராஜ் சிவராஜின் இயக்கத்தில் ப்ளாக்போர்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு பூவன் மதீஷன் இசையமைத்துள்ளார்.

இதில் பூவன் மீடியா மற்றும் பெட்ரோல் செட் ஆகிய யூடியூப் தளங்களின் மூலம் பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் இன்று முதல் இலங்கையிலுள்ள திரையரங்குகளில் திரையிடப்படும் நிலையில், அதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

”தம்பி ராஜ் சிவராஜின் இயக்கத்தில் நம் நாட்டில் வெளிவந்திருக்கும் ‘புத்தி கெட்ட மனிதரெல்லாம்’ திரைப்படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்சியளிக்கிறது. ‘பூவன் மீடியா’ குழுவுக்கும் சார்ந்தோர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.