File Photo
மாத்தறை மாவட்டத்தின் கந்தர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் விசாரணை நடத்தி அவரை கைது செய்துள்ளனர்.
அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி மாத்தறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.