January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் உச்சம் தொட்ட பெரிய வெங்காயத்தின் விலை

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில் இந்த நாட்களில் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை ரூ.290 முதல் ரூ.300 வரை அண்மித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், பெரிய வெங்காயம் ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் இன்று (17) கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதில் சில கொள்கலன்கள் கடனுக்காக விடுவிக்கப்படுவதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், சந்தையில் நிலவும் மரக்கறி விலைகளைப் பார்க்கும் போது, கொழும்பில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இது இவ்வாறிருக்க, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலைகள் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.