May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தங்கத்தின் விலையில் சடுதியான அதிகரிப்பு!

உலக அளவில் அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தங்கத்தின் விலையிலும் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், நவம்பர் இரண்டாம் வாரத்திற்கு பின்னர் தங்கத்தின் விலையில் 14 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1,807 டொலராக காணப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய இலங்கையில் 24 கரட் தங்கத்தின் 8 கிராமிற்கான விலை 117,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் 8 கிராமிற்கான விலை 107,250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல், 21 கரட் தங்கத்தின் 8 கிராமிற்கான விலை 102,375 ரூபாவாகவும் 18 கரட் தங்கத்தின் 8 கிராமிற்கான விலை 87,750 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.