May 12, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பதில் நிதி அமைச்சராக ஜீ.எல். பீரிஸ் நியமனம்

வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சர் பஸில் தனிப்பட்ட தேவைக்காக வெளிநாட்டுக்குப் பயணமானதால், ஜீ.எல். பீரிஸ் பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பஸில் ராஜபக்‌ஷ ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அல்லது அமெரிக்காவுக்குப் பயணமானதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நிதி அமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சித்துள்ளனர்.